π ஐக் கண்டுபிடித்தல்
நோக்கம்
எந்த வட்டத்தினதும் சுற்றளவு அதன் விட்டத்தின் ஏறத்தாழ 3.14 மடங்கு எனக் காட்டுதல்.
உபகரணங்கள்
- வட்டப் பொருட்கள் (நாணயம், வளையல், தட்டு, சில்லு)
- நூல்
- அளவுகோல்
முறை
- ஒரு வட்டப் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
- அளவுகோலால் விட்டத்தை (d) அளக்கவும்.
- பொருளைச் சுற்றி நூலை ஒரு முறை சுற்றி நூலின் நீளத்தை அளக்கவும்: இது சுற்றளவு (C).
- அளவீடுகளைப் பதிவு செய்து C ÷ d ஐக் கணிக்கவும்.
- குறைந்தது 4 பொருட்களுக்குத் திரும்பச் செய்து இடையைக் காணவும்.
முடிவு
C ÷ d எல்லா வட்டங்களுக்கும் ஏறத்தாழ ஒன்றே: சுமார் 3.14. இந்த எண் π எனப்படும்; எனவே C = πd = 2πr.