அமில–கார நியமிப்பு

உயர்தர இரசாயனவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13

நோக்கம்

0.100 mol dm⁻³ HCl உடன் நியமிப்பதன் மூலம் சோடியம் ஐதரொட்சைட்டுக் கரைசலின் செறிவைக் காணுதல்.

உபகரணங்கள்

முறை

  1. பியூரெட்டை HCl ஆல் கழுவி நிரப்பி ஆரம்ப வாசிப்பைக் குறிக்கவும்.
  2. 25.00 cm³ NaOH ஐ குடுவையில் எடுத்து பீனோல்ப்தலீன் 2–3 துளி இடவும் (இளஞ்சிவப்பு).
  3. அமிலத்தைச் சேர்த்துக் குலுக்கவும்; முடிவுக்கு அருகில் துளித்துளியாகச் சேர்க்கவும்.
  4. இளஞ்சிவப்பு மறையும்போது (முடிவுப் புள்ளி) வாசிக்கவும்: நியமிப்பளவு.
  5. 3 நியமிப்பளவுகள் 0.10 cm³ இற்குள் ஒத்துப்போகும் வரை திரும்பச் செய்யவும்.

முடிவு

முடிவுப் புள்ளியில் n(HCl) = n(NaOH); எனவே c(NaOH) = 0.100 × நியமிப்பளவு ÷ 25.00 mol dm⁻³.