உலோகங்களின் வினைத்திறன்
சாதாரண தர விஞ்ஞானம் · க.பொ.த. சாதாரண தரம் · தரம் 10–11
நோக்கம்
சில உலோகங்களின் வினைத்திறன் வரிசையைக் காணுதல்.
உபகரணங்கள்
- Mg, Al, Zn, Fe, Cu துண்டுகள்
- ஐதான HCl, CuSO₄ கரைசல்
- சோதனைக் குழாய்களும் நீரும்
முறை
- ஒவ்வொரு உலோகத்தையும் ஐதான HCl இல் இட்டுக் குமிழ்களை அவதானிக்கவும்.
- குளிர் நீர், நீராவியுடனும் சோதிக்கவும்.
- CuSO₄ கரைசலில் இட்டுச் செம்பு படிகிறதா எனப் பார்க்கவும்.
- வேகத்தின்படி உலோகங்களை வரிசைப்படுத்தவும்.
முடிவு
வினைத்திறன் வரிசை: Mg > Al > Zn > Fe > Cu. வினைத்திறன் கூடிய உலோகம் குறைந்ததை அதன் உப்புக் கரைசலிலிருந்து இடம்பெயர்க்கும்.